தமிழகத்தில் 'ஐ பேட்' உற்பத்தி பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு
தமிழகத்தில் 'ஐ பேட்' உற்பத்தி பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு
ADDED : ஜூலை 27, 2024 02:44 AM

புதுடில்லி: 'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐபோனுக்கான ஒப்பந்த தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், 'ஐபேட்' தயாரிப்பையும் தமிழகத்தில் துவக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைக்காலமாக, சீனாவில் இருந்து தனது தயாரிப்புகளின் உற்பத்தி மையத்தை மாற்றுவதில், ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்தாண்டு, இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மேம்படுத்தியதோடு, 'ஐ பேட்' உற்பத்தியை வியட்நாமிற்கு
மாற்றியிருந்தது.
இந்நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம், தனது ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலையில், 'ஐ பேட்' தயாரிப்பு பணியை துவங்கதிட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன், ஏற்கனவே பேச்சை துவங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, இத் துறையை சேர்ந்தஅதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஸ்ரீபெரும்புதுார் தொழிற்சாலையில் போதிய உள்கட்டமைப்புவசதிகள் இருப்பதால், பெரிய சிரமமின்றிஐ போனுடன் சேர்த்து 'ஐ பேட்' உற்பத்தியையும் மேற்கொள்ளமுடியும்'' என தெரிவித்தார். இவ்வாறு கூறினார்.