விமானங்கள் பராமரிப்புக்கு 'ப்ளை 91 - ஏ.டி.ஆர்.,' ஒப்பந்தம்
விமானங்கள் பராமரிப்புக்கு 'ப்ளை 91 - ஏ.டி.ஆர்.,' ஒப்பந்தம்
ADDED : ஜன 31, 2026 01:14 AM

சென்னை : இந்தியாவின், 'ப்ளை 91' விமான நிறுவனம் மற்றும் ஏ.டி.ஆர்., நிறுவனம் இடையே 8 ஆண்டுகளுக்கு பராமரிப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கோவாவை தலைமை இடமாக கொண்டு, 'ப்ளை 91' விமான நிறுவனம் கடந்த 2024ல் இருந்து செயல்பட்டு வருகிறது. கோவா, கொச்சி, புனே ஆகிய இடங்களுக்கு விமானங்களை இது இயக்குகிறது.
இந்நிறுவனத்தின் சில விமானங்கள் சிறப்பு விமானங்களாக தமிழகத்திலும் இயக்கப்படுகின்றன.
தற்போது நான்கு ஏ.டி.ஆர்., 72 வகை விமானங்களை இந்நிறுவனம் வைத்துள்ளது. நடப்பாண்டு கூடுதலாக இரண்டு விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.
இந்நிலையில், விமானக் கூட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையிலும், பராமரிப்பு பணிகளை அதிகரிக்கவும், ப்ளை 91 மற்றும் ஏ.டி.ஆர்., நிறுவனம் இடையே, தெலுங்கானாவின் பேகம்பேட்டையில் நடந்து வரும், 'விங்ஸ் இந்தியா' கண்காட்சியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

