ADDED : ஆக 06, 2025 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:'புட்வேர் டிசைனிங் அண்டு டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்' நிறுவனத்தின் சார்பில், 'விஷன் 2030' நிகழ்ச்சி இருங்காட்டுக்கோட்டையில் நேற்று நடந்தது.
காலணி வடிவமைப்பிற்கு என்று பிரத்யேகமாக துவங்கப்பட்ட கல்வி நிறுவனமான புட்வேர் டிசைனிங் அண்டு டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வருகிறது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் பட்டியலில், 2007ம் ஆண்டு இந்த நிறுவனம் இடம் பெற்றதை கொண்டாடும் விதமாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் காலணி உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும் விஷன் 2030 நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், உலகளாவிய டிசைனில் இந்திய காலணி வடிவமைப்பு துறை இணைவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றன.