ADDED : ஜூன் 28, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:இந்திய பங்குச் சந்தையில், கடந்த வாரத்தில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், 13,107 கோடி ரூபாயை முதலீடு செய்தனர்.
கடந்த 23 முதல் 27ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அவர்கள் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளதாக என்.எஸ்.டி.எல்., வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, திங்கள், வெள்ளிக்கிழமையில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததால், உலகளாவிய சந்தைகள் சாதகமான சூழலுக்கு திரும்பின. இதனுடன், இந்தியாவின் வலுவான பொருளாதாரம், ரெப்போ வட்டி குறைப்பு, பணவீக்கம் சரிவு ஆகியவை, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை குவிக்க காரணமாக கூறப்படுகிறது.