ADDED : ஜூன் 14, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், கடந்த வாரம் 3,347 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்ததாக என்.எஸ்.டி.எல்., தரவுகள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பின் காரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்ததையடுத்து, கடந்த வாரத்தின் முதல் மூன்று வர்த்தக அமர்வுகள், முதலீட்டுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.
ஈரான் - இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக, 3,276 கோடி ரூபாயை, அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றனர்.