ADDED : ஜன 19, 2024 10:56 PM

புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 20,480 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
இது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும், அன்னிய முதலீட்டாளர்களுக்கும் இடையேயான வர்த்தகப் போட்டியில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவின் பத்து ஆண்டு கடன் பத்திரங்களின் வருவாய் 4.16 சதவீதமாக அதிகரித்துள்ளதும், இந்திய பங்குச் சந்தைகளின் உயர் மதிப்பீடுமே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பதற்கு முக்கிய காரணங்களாகும்.
அன்னிய முதலீட்டாளர்கள் வங்கி துறை சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்துள்ளால், அத்துறை சார்ந்த பங்குகளை விற்று வருகின்றனர். குறிப்பாக எச்.டி.எப்.சி., வங்கி பங்குகளை விற்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் இடையே நடக்கும் போட்டியில், எப்போதும் உள்நாட்டு முதலீட்டாளர்களே வெற்றி பெறுகின்றனர்.
வெளிப்புற காரணிகளால் உந்தப்பட்டு, அன்னிய முதலீட்டளர்கள் பங்குகளை விற்பது, இங்குள்ள முதலீட்டாளர்களுக்கு அந்த பங்குகளை வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இந்நிலையில், அதிகப்படியான மதிப்பீடுகள் இருந்தபோதிலும், நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்கள் தொடர்ந்து வலுவாகவே உள்ளன.
இவற்றின் பங்குகள் தொடர்ந்து வாங்கப்படுவதும், அன்னிய முதலீட்டாளர்கள் இவற்றின் பங்குகளை விற்காமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
இவ்வாறு கூறினர்.
அன்னிய முதலீட்டளர்கள் பங்குகளை விற்பது, இங்குள்ள முதலீட்டாளர்களுக்கு அவற்றை வாங்குவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது