5 நாளில் ரூ.20,000 கோடி பங்குகள் அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை
5 நாளில் ரூ.20,000 கோடி பங்குகள் அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை
ADDED : ஜன 27, 2025 01:02 AM

மும்பை, ஜன. 27-
அன்னிய முதலீட்டாளர் கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் உள்ளனர். கடந்த வாரத்தின் 5 வர்த்தக நாட்களில் மட்டும் 19,759 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக நடப்பு ஜனவரி மாதத்தில் 64,156 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டு பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள், அந்நாட்டை முதலீட்டுக்கு சாதகமான இடமாக மாற்றியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரித்திருப்பதும்; டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதும் முதலீடுகள் வெளியேற காரணமாகின.

