ரூ.10,487 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ரூ.10,487 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ADDED : செப் 07, 2025 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க டந்த செப்., 1 முதல் 4 வரையிலான நான்கு வர்த்தக நாட்களில், அன்னிய முதலீட்டாளர்கள், 10,487 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்று இருப்பதாக என்.எஸ்.டி.,எல்., எனும் தேசிய மின்னணு பங்கு ஆவண காப்பகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 1ம் தேதியன்று மட்டுமே 7,715 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 94,600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெற்று உள்ளனர்.
விற்பனைக்கான முக்கிய காரணங்கள்
* இந்தியா--அமெரிக்கா வர்த்தக பதற்றம்.
* நிறுவனங்களின் மந்தமான காலாண்டு முடிவுகள்.
* ரூபாய் மதிப்பு சரிவு.
* பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு.