விரிவாக்கத்துக்கு 'பாக்ஸ்கான்' விண்ணப்பம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு
விரிவாக்கத்துக்கு 'பாக்ஸ்கான்' விண்ணப்பம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு
ADDED : நவ 19, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா சுங்குவார்சத்திரத்தில், 'பாக்ஸ்கான்' நிறுவன தொழிற்சாலை உள்ளது. அங்கு, 'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐபோன்' சாதனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்போது, தொழிற்சாலையை 1,792 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது.
இதன்படி, தற்போது, 3.55 லட்சம் சதுர மீட்டரில் உள்ள தொழிற்சாலையை, கூடுதலாக, 1.23 லட்சம் சதுர மீட்டர் விரிவாக்கம் செய்து, மொத்த கட்டுமானம், 4.79 லட்சம் சதுர அடியாக அதிகரிக்க உள்ளது.
விரிவாக்கத்தால் கூடுதலாக, 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என, தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.