தடையற்ற வர்த்தகம்: இந்தியா - பிரிட்டன் மீண்டும் பேச்சு
தடையற்ற வர்த்தகம்: இந்தியா - பிரிட்டன் மீண்டும் பேச்சு
ADDED : நவ 21, 2024 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பமாகும் என, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரேசிலில் 'ஜி--20' மாநாட்டுக்கு வெளியே,
பிரதமர் மோடி, ஸ்டார்மர் சந்தித்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவுடன் மிக நெருக்கமான வர்த்தக உறவை ஏற்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடியிடம் ஸ்டார்மர் தெரிவித்தார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சு, 2022ல் துவங்கியது. 13 கட்ட பேச்சுகள் நடந்த நிலையில், பிரிட்டன் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களால், 14வது கட்ட பேச்சு
தடைபட்டது.

