ADDED : அக் 15, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எத்தனால் தொழிலின் எதிர்காலம்
பெ ட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து, எத்தனால் துறைக்கான எதிர்கால திட்டத்தை அறிவிக்குமாறு எத்தனால் தொழில்துறை கூட்டமைப்பு கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
மேலும், பெட்ரோலில் எத்தனால் கலப்பில் இயங்கும் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மின்சார வாகனங்களை போலவே இந்த வாகனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளன.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை முன்கூட்டியே எட்டியுள்ளதால், இந்த வெற்றியை தொடர அரசின் கொள்கை முடிவுகளின் தொடர்ச்சி மிகவும் அவசியம் என கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.