முன்னாள் சி.எப்.ஓ., மீது போலீசில் கேம்ஸ்கிராப்ட் புகார்
முன்னாள் சி.எப்.ஓ., மீது போலீசில் கேம்ஸ்கிராப்ட் புகார்
ADDED : செப் 05, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ், நிதி முறைகேடு தொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மீது போலீசில் புகார் அளித்துள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், முந்தைய 2023--24ம் நிதியாண்டில், 947 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. இதனிடையே, கடந்த 2024--25ம் நிதியாண்டில்,முன்னாள் தலைமை நிதி அதிகாரி 231 கோடி ரூபாய் அளவுக்கு செய்த முறைகேடு, உள்ளிட்ட காரணங்களால் நிகர லாபம் 706 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.