ADDED : பிப் 13, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : 'ஜென்சால் இன்ஜினியரிங்' நிறுவனம் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் தயாரிப்பதற்கான திட்டத்தை வென்றுள்ளதாக தெரிவித்து உள்ளது.
உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் தயாரிப்பதற்கான ஏலத்தை, ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் அதன் கூட்டமைப்பு நிறுவனமான 'மேட்ரிக்ஸ் கேஸ்' வென்று உள்ளது.
ஆண்டுக்கு, 63 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறன் கொண்ட இத்திட்டம், 2030க்குள் ஆண்டுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் இந்தியாவின் இலக்கில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.