3 மாநிலங்களில் தங்க சுரங்கம் புவியியல் ஆய்வகம் கண்டுபிடிப்பு
3 மாநிலங்களில் தங்க சுரங்கம் புவியியல் ஆய்வகம் கண்டுபிடிப்பு
ADDED : நவ 10, 2025 11:55 PM

புதுடில்லி: தங்கம் விலையால் அதிர்ச்சியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நம் நாட்டில் மூன்று மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுபற்றி எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒடிஷா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய தங்க சுரங்கம் ஏற்படுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒடிஷாவின் தியோகார், கோஞ்சார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில், மொத்தம் 1,685 கிலோ கச்சா தங்கக்கட்டிகளை இந்திய புவியியல் ஆய்வமைப்பான ஜி.எஸ்.ஐ., கண்டறிந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் கண்டறியப்பட்டுள்ள பகுதியில், லட்சக்கணக்கான டன் கச்சா தங்கக் கட்டிகள் கிடைக்கலாம் என்றும், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் தனியார் இடத்தில், 750 கிலோ தங்கம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள தங்கத்தால், பெரும்பாலும் தங்கத்துக்கு இறக்குமதியை நம்பியுள்ள நம்நாட்டின் அன்னியச் செலாவணி அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய குடும்பங்களில் 25,000 டன்னுக்கு கூடுதலாக தங்கம் உள்ளது தங்கத்தின் தேவை அதிகமுள்ள நம்நாட்டில், 86% தங்கம் இறக்குமதி கடந்த 2024ல் நாட்டின் தேவையான 800 டன் தங்கம், இறக்குமதி உலகின் மொத்த தங்கம் தேவையில் இந்தியாவின் பங்கு மட்டும் 26%

