ஜெர்மனியின் ரென்க் கியர்ஸ் சூளகிரியில் ஆலை துவக்கம்
ஜெர்மனியின் ரென்க் கியர்ஸ் சூளகிரியில் ஆலை துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:ராணுவ இயந்திரங்கள், வாகனங்களுக்கான கியர்பாக்ஸ்கள், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஜெர்மனியின் ரென்க் கியர்ஸ் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் புதிய உற்பத்தி ஆலையை துவக்கி உள்ளது.
இது, இந்நிறுவனத்தின் முதல் இந்திய உற்பத்தி ஆலை ஆகும். தமிழகத்தின் ராணுவ வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மற்றும் இதர பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கு தேவையான கியர்பாக்ஸ், டிரான்ஸ் மிஷன் உதிரிபாகங்கள், பியரிங் உள்ளிட்டவை இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
மேலும், இந்தியாவின் அர்ஜுன் பீரங்கி மற்றும் ஐ.என்.எஸ்., விக்ராந்த் கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் கட்டமைப்புகளில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி உள்ளது.