ADDED : பிப் 12, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த ஜனவரியில் தங்க இ.டி.எப்., திட்டங்களில், வரலாறு காணாத அளவுக்கு 3,751 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக, இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
சமீபகாலமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில், நேரடியாக முதலீடு செய்வதை விட, தங்க இ.டி.எப்., திட்டங்கள் வாயிலாக தங்கத்தை யூனிட்களாக டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை, ரிசர்வ் வங்கி உள்பட பல்வேறு மத்திய வங்கிகளின் பணக்கொள்கை மாற்றம் போன்ற உலகளாவிய அசாதாரண சூழல்களால், கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களின் பார்வை, தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் நீடிக்கிறது.