ADDED : ஏப் 18, 2025 10:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த மார்ச்சில் 37,995 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்று உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில், 192.13 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த பிப்ரவரியில் 62 சதவீதம் அளவுக்கு தங்கம் இறக்குமதி சரிவை கண்ட நிலையில், தேவை காரணமாக மார்ச்சில் அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 2024 - -25ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி மதிப்பு 27.27 சதவீதம் அதிகரித்து, 4.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2023 -- 24ம் நிதியாண்டில் 3.87 லட்சம் கோடி ரூபாயாக- இருந்தது.