மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி 22 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி 22 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
UPDATED : ஜன 03, 2026 04:32 AM
ADDED : ஜன 03, 2026 03:05 AM

புதுடில்லி:மின்னணு பொருட்களின் உதிரிபாக உற்பத்தி திட்டத்தின்கீழ், 22 புதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. டில்லியில் ஒப்புதல் கடிதங்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வழங்கினார்.
இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளதாவது:
இவற்றில் 22 நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12,704 கோடி ரூபாய் முதலீட்டிலான 24 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
![]() |
இந்நிலையில், அடுத்த கட்ட விண்ணப்பங்களுக்கும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், மொபைல் உற்பத்தி, தொலைத்தொடர்பு, நுகர்வோர் மின்னணு பொருட்கள், வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் ஆகிய பல்வேறு துறைகளுக்கு முதலீடுகள் பகிரப்பட்டுள்ளன.
உள்நாட்டு வினியோக கட்டமைப்பை பலப்படுத்துவது, முக்கிய மின்னணு பொருட்களின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்ப்பது ஆகியவற்றுக்காக தற்போதைய முதலீட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முதலிடம்
இதனிடையே, 'மத்திய அரசின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ், முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் மீண்டும் முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
மொத்தம், 41,863 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளில், டாடா எலக்ட்ரானிக்ஸ், மதர்சன், பாக்ஸ்கான் வாயிலாக, தமிழகத்தில், 27,166 கோடி ரூபாய், முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அவை, தமிழகத்தில், 23,451 வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன என்று அவர் கூறியுள்ளார்.


