கொட்டை பாக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதித்தது அரசு
கொட்டை பாக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதித்தது அரசு
ADDED : அக் 17, 2025 01:21 AM

புதுடில்லி: கொட்டை பாக்கு ஒரு கிலோ 351 ரூபாய்க்கு குறைவாக இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வறுக்கப்பட்ட கொட்டை பாக்கு இறக்குமதிக்கு இந்த தடை பொருந்தும் என அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எனினும், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும், முன்கூட்டி அங்கீகார திட்டத்தின் கீழ் இறக்குமதி அனுமதி பெற்ற, 100 சதவீத ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சை பூர்விகமாக கொண்ட கொட்டை பாக்கு, ஒரு வகை பனை மரத்தில் இருந்து பெறப்படுகிறது.
காய வைத்து, வறுக்கப்பட்ட இவை, கொட்டை பாக்காக, வெற்றிலையுடன் சேர்த்து மெல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. நம்நாடு உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் கொட்டை பாக்கு மெல்வது கலாசார முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.