மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
ADDED : மார் 10, 2025 10:02 AM

புதுடில்லி: புதிய தொழில்துறை உற்பத்தி குறியீட்டு தொடருக்காக, கடந்த 2022 ஏப்ரல் முதல் மாதாந்திர உற்பத்தி தரவை சமர்ப்பிக்குமாறு, தொழில் துறை நிறுவனங்களை டி.பி.ஐ.ஐ.டி., கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.ஐ.பி., எனப்படும் தொழில்துறை உற்பத்திக்கான குறியீட்டின் புதிய தொடருக்காக, கடந்த 2022 ஏப்ரல் முதல் மாதாந்திர உற்பத்தி புள்ளி விபரங்களை சமர்ப்பிக்குமாறு, டி.பி.ஐ.ஐ.டி., எனப்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை உற்பத்தி துறை நிறுவனங்களை கேட்டுக்கொண்டு உள்ளது.
நாட்டின் தொழில்துறை கண்காணித்து, வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் உத்திகளை டி.பி.ஐ.ஐ.டி., உருவாக்கி வருகிறது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த 2024 டிசம்பரில் மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 3.20 சதவீதமாக குறைந்திருந்தது.
இதையடுத்து, தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இந்த மாதாந்திர உற்பத்தி புள்ளி விபரங்களை அரசின் இணைய தளத்தில் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்களை டி.பி.ஐ.ஐ.டி., கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.ஐ.பி.,யின் அடிப்படையில், நாட்டின் தொழிற்சாலைகளின் உற்பத்தி வளர்ச்சி அளவிடப்படுகிறது. தேசிய புள்ளி விபர அலுவலகம் இதற்கான தரவுகளை வெளியிட்டு வருகிறது.