ADDED : ஜன 29, 2025 11:46 PM

புதுடில்லி:ரோந்து படகுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில படகுகள் மற்றும் வாகனங்களின் இறக்குமதிக்கு விதித்திருந்த தடையை, மத்திய அரசு விலக்கிஉள்ளது.
ரோந்து அல்லது கண்காணிப்பு படகுகள், ஏர் - குஷன் வாகனங்கள் மற்றும் ரிமோட் வாயிலாக இயக்கப்படும் வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக விலக்குவதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் - நவம்பர் காலத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி கிட்டத்தட்ட 4 கோடி ரூபாயாக இருந்தது.
இதுதவிர, 'ரோட்டெப்' எனும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி நீக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானத்தை தாக்கல் செய்ய, புதிய ஆன்லைன் மாட்யூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட்டெப் வாயிலாக, பல்வேறு மத்திய, மாநில அரசு வரிகள் மற்றும் உள்ளீட்டுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பியளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.