ADDED : செப் 10, 2025 12:14 AM

புதுடில்லி:அமெரிக்காவின் அதிக வரி விதிப்பின் பாதிப்பில் இருந்து நம் நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்க, ஒருங்கிணைந்த தொகுப்பை அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் அவர் கூறியதாவது:
இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு, அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
அவர்களைக் காக்க, அரசின் பல்வேறு துறைகள் பேச்சு நடத்தி, ஒருங்கிணைந்த தொகுப்பை அறிவிக்க ஆலோசித்து வருகின்றன. ஏற்றுமதியாளர்களின் ஆலோசனைகளை அரசு பெற்று வருகிறது. ஏதாவது ஒரு வகையில் உதவி அளிப்பதற்கு, அனைத்து துறைகளுடனும் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
2024 - 25 நிதியாண்டில், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் வணிகம், 20 சதவீதம்

