தமிழகத்தில் 'கேமிங்' தொழிலில் முதலீட்டை ஈர்க்க அரசு பேச்சு
தமிழகத்தில் 'கேமிங்' தொழிலில் முதலீட்டை ஈர்க்க அரசு பேச்சு
ADDED : ஆக 13, 2025 02:08 AM

சென்னை; தமிழகத்தில், கேமிங் தொழிலில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர் ராஜா, சென்னையில் நேற்று பேச்சு நடத்தினார்.
இந்தியாவில், கேமிங் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் பல்வேறு நாடுகளின் முதலீட்டை ஈர்ப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களால் நம் நாட்டிலேயே பல விளையாட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதற்கு ஏற்ப இந்த தொழிலில், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
எனவே, தமிழகத்தில் கேமிங் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, அந்த துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களுடன், சென்னை, 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது நேற்று பேச்சு நுடத்தினர்.
இதில், 'எபிக் கேம்ஸ், நஸாரா டெக்னாலஜிஸ், ஜெட் சின்தசிஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.