'கிரேட் நிகோபர் திட்டத்தால் கடல்சார் வணிகம் பெருகும்'
'கிரேட் நிகோபர் திட்டத்தால் கடல்சார் வணிகம் பெருகும்'
ADDED : அக் 27, 2025 11:00 PM

புதுடில்லி: 'கிரேட் நிகோபரில் 44,000 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்பாட்டு திட்டத்தால், நாட்டின் கடல்சார் வணிகம் பன்மடங்கு அதிகரிக்கும்' என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
அந்தமான் நிகோபர் தீவுகளின் தென்கோடி தீவான கிரேட் நிகோபரில் மேம்பாட்டு திட்டத்தை அரசு மேற்கொள்கிறது. இதன் வாயிலாக, இந்திய கடல் சார் துறையில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. உலகின், 'டாப் 5' கப்பல் கட்டும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
நாட்டின் ஆழமான வரைவு துறைமுகங்களால் சரக்கு கையாளல் மூன்று மடங்கு அதிகரித்து, 10,000 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
மும்பை அருகே அமையும் வாதவன் துறைமுகம், உலகளவில் டாப் 10 துறைமுகத்தில் ஒன்றாக திகழும். உலகளவில் கடல்சார் துறையில், இந்தியா வளர்வதற்கு தேவையான சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

