இரண்டு விருதுகளை பெற்ற 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி'
இரண்டு விருதுகளை பெற்ற 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி'
ADDED : டிச 03, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மின்சார வாகன நிறுவனமான கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி, டைம்ஸ் டிரைவ் கிரீன் மாநாட்டில் இரண்டு கவுரவமிக்க விருதுகளை வென்றது.
ஆண்டின் சிறந்த இ.வி., சி.இ.ஓ., மற்றும் ஆண்டின் வேகமாக வளரும் மின்வாகன பிராண்டு என்ற இந்த விருதுகளை, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் இருந்து, கிரீவ்ஸ் நிறுவன செயல் இயக்குநர், விஜயகுமார், சந்தைப் பிரிவு தலைவர் சித்தாந்த் வோரா பெற்றுக் கொண்டனர்.
மின்சார வாகன தயாரிப்பு மற்றும் நீடித்த போக்குவரத்து தீர்வுகளில் நிறுவனத்தின் உறுதி மற்றும் சுற்றுச்சூழலில் சாதகமான நிலையை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இந்த விருதுகள் சான்றாக அமைந்துள்ளதாக கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிளிட்டி தெரிவித்துள்ளது.