ADDED : ஜன 01, 2025 07:15 AM

புதுடில்லி: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டை கடந்துள்ளது. கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, இது 205 ஜிகாவாட்டாக உள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று துவங்கியுள்ள புதிய ஆண்டில், இதற்கான முதலீடு 2.72 லட்சம் கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பின் கணிப்பின் படி, பசுமை எரிசக்தியின் ஆண்டுதோறும் அதிகரிப்பு, கடந்த 2023ம் ஆண்டில் 15 ஜிகாவாட்டாக இருந்தது. இது, வரும் 2030க்குள் ஆண்டுக்கு 62 ஜிகாவட்டாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலகட்டத்தில் உலகிலேயே விரைவாக எரிசக்தி திறன் அதிகரிப்பை அடையும் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

