திருநெல்வேலி, விருதுநகரில் பசுமை மின்திட்ட திறன் மையம்
திருநெல்வேலி, விருதுநகரில் பசுமை மின்திட்ட திறன் மையம்
UPDATED : அக் 17, 2025 01:18 AM
ADDED : அக் 17, 2025 01:17 AM

சென்னை: திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு பசுமை மின் திட்டத்துக்கான திறன் மையத்தை, டாடா பவர் நிறுவனம் அமைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில், டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி நிறுவனத்தின், 4,300 கோடி ரூபாய் முதலீட்டிலான, சூரியசக்தி மின் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஆலை அமைந்து உள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரத்தின் பொது - தனியார் கூட்டு முயற்சியின் கீழ், டாடா பவர் நிறுவனம், சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை உள்ளடக்கிய பசுமை மின் திட்டங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக, டாடா பவரின் திறன் மேம்பாட்டு பிரிவான டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனம், திருநெல்வேலியின் பேட்டை, விருதுநகரின் சாத்துார் ஆகிய இடங்களில், பசுமை மின்திட்ட திறன் மையத்தை அமைத்துள்ளது. இந்த மையம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.