விமான இன்ஜின் பிளேடு தயாரிக்க ரோல்ஸ் ராய்ஸ் - பாரத் போர்ஜ் கூட்டு
விமான இன்ஜின் பிளேடு தயாரிக்க ரோல்ஸ் ராய்ஸ் - பாரத் போர்ஜ் கூட்டு
ADDED : அக் 17, 2025 01:11 AM

மும்பை: அதிநவீன விமான இன்ஜினில் பயன்படுத்தும் பிளேடுகளை தயாரித்து, வினியோகம் செய்வது தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த விமான இன்ஜின் தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ், பாரத் போர்ஜ் உடன் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது.
புனேவைச் சேர்ந்த கல்யாணி குழுமத்துக்கு சொந்தமான பாரத் போர்ஜ் நிறுவனம், கடந்த 2024ல் பியர்ல் 700 திட்டம் துவங்கியது முதலே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு உயர் தர பிளேடுகளை வினியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த பியர்ல் 10 எக்ஸ் இன்ஜினுக்கான பிளேடுகள், தயாரிப்பு வினியோகம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் விமான இன்ஜின் தயாரிப்பில், பங்களிப்பை வழங்கும் முதல் மற்றும் ஒரே இந்திய நிறுவனம் பாரத் போர்ஜ் ஆகும்.
இந்தியாவின் ராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் 1,400க்கும் மேற்பட்ட விமானங்களில், ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.