ADDED : அக் 17, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான கட்டணம் மற்றும் கணக்கீடு விதிகளை மாற்றியமைக்க டிராய் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தொலைத் தொடர்பு கட்டண உத்தரவு 1999 மற்றும் கணக்கீடு முறைப்படுத்தும் விதிகள் 2016 ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டு வர டிராய் பரிசீலித்து வருகிறது.
டிராய்க்கு குறிப்பிட்ட இடைவெளியில் தொலைபேசி நிறுவனங்கள் தகவல்களை வழங்க இந்த திருத்தங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. தாமதமாக அல்லது செலுத்தப்படாமல் இருக்கும் கட்டணத்துக்கு கூடுதல் வரி விதிக்கவும், செலுத்தப்படாத நிலுவை தொகைக்கு வட்டி வசூலிக்கவும், தாமதமாக செலுத்தும் கட்டணத்துக்கு அபராதம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.