ADDED : டிச 22, 2024 01:40 AM

புனே:பஜாஜ் நிறுவன ஆண்டு வருமானத்தில், சி.என்.ஜி., மற்றும் மின்சார வாகனங்கள் மட்டும் 40 சதவீத பங்கை வகிப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இருசக்கர மின்வாகன சந்தை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், பஜாஜ் நிறுவனம், அதன் அடுத்த தலைமுறை சேத்தக் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
அப்போது அவர் பேசியதாவது:
மின் வாகன சந்தையில் எங்களுக்கான சந்தை பங்கை தக்கவைக்க விரும்புகிறோம். இது ஒரு மாரத்தான், அதனால், முதலில் வர வேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை, அதேசமயம் கடைசியிலும் வரக் கூடாது. தொடர்ந்து, நிலையான வேகத்தில் வளர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாகன பதிவேடு தரவுகளின் படி, டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்கள் விற்பனையில், பஜாஜ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. அதாவது, 12,651 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, 26.60 சதவீத சந்தை பங்கை வைத்துள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவதாக டி.வி.எஸ்., மற்றும் ஓலா நிறுவனங்கள் உள்ளன.