ADDED : அக் 08, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ஆம்புத்ஸ்மான் எனப்படும் குறைதீர் உயர் நடுவர் அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன.
இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அனைத்து வணிக வங்கிகள், மாநில கிராம வங்கிகள், மாநில - மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் என 50 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் கொண்டுள்ள வங்கிகள், ஒருங்கிணைந்த ஆம்புத்ஸ்மான் திட்டம் 2021ன் கீழ், நவம்பர் 1ம் தேதி முதல் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.