ADDED : ஏப் 22, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; கடந்த மார்ச் மாதத்தில், முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 3.80 சதவீதமாக சரிந்துள்ளதாக, மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்தாண்டு மார்ச்சில் 6.30 சதவீதமாக இருந்தது.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உற்பத்தி கணிசமாகக் குறைந்ததே, வளர்ச்சி குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள், ஸ்டீல், மின்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சியும் சற்று குறைந்துள்ளது. உரம், சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி மட்டும் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில் இந்த எட்டு துறைகளின் சராசரி வளர்ச்சி 4.40 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 2023 -24ம் நிதியாண்டில் 7.60 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.