ADDED : ஆக 10, 2025 06:57 PM

மி யூச்சுவல் பண்டு பரப்பில் சமபங்கு நிதிகளில் ஸ்மால்கேப் நிதிகள் அதிகபட்சமாக, 20 சதவீத வளர்ச்சி பெற்றிருப்பது ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
மியூச்சுவல் பண்டு முதலீடு தொடர்பான வென்சுரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், முந்தைய காலாண்டில் ஸ்மால்கேப் நிதிகள் குறைவான வளர்ச்சி கண்டிருந்த நிலை மாறி, ஜூன் காலாண்டில் 20 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிட்கேப் மற்றும் மல்டிகேப் நிதிகளும் வளர்ச்சி கண்டுள்ளன. லார்ஜ்கேப் நிதிகள், டிவிடெண்ட் நிதிகள் மற்றும் இ.எல்.எஸ்.எஸ்., நிதி பிரிவுகள் மந்தமான வளர்ச்சி கண்டு உள்ளன.
மேலும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் புதிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளிலும் கணிசமாக முதலீடு செய்துள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் பொது பங்கு வெளியீடுகளில் மியூச்சுவல் பண்டு முதலீடுகளில் பெரும்பாலானவை ஸ்மால் கேப் நிறுவனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி வாய்ப்புள்ள, ஆரம்ப நிலை நிறுவனங்களை, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நாடும் போக்கின் அடையாளமாக இது அமைகிறது. முதலீட்டாளர்களும், அதிக பலன் சார்ந்த தீவிரமான உத்திகளை நாடுவதன் அடையாளமாகவும் இது கருதப்படுகிறது.