தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/குஜராத்தில் சிறுதொழில்களுக்கு புதிய சலுகை: முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 1% வட்டி சலுகை

குஜராத்தில் சிறுதொழில்களுக்கு புதிய சலுகை: முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 1% வட்டி சலுகை

குஜராத்தில் சிறுதொழில்களுக்கு புதிய சலுகை: முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 1% வட்டி சலுகை


UPDATED : அக் 10, 2026 02:08 PM

ADDED : அக் 10, 2026 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 02:08 PM ADDED : அக் 10, 2026 02:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திநகர்: குஜராத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் ஐந்தாண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாவது:

‘விக்சித் குஜராத் தொழில் கொள்கை 2026’ கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2026 ஜூன் 1 முதல் 2031 மே 31 வரை இது அமலில் இருக்கும். தகுதியான நிறுவனங்களுக்கு முதலீடு, வங்கி கடன் வட்டி, மின்சாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய தொழில்நுட்பம் மற்றும் சந்தை விரிவாக்கம் போன்றவற்றுக்கு உதவி வழங்கப்படும்

தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள பகுதிகளில் முதலீட்டின் 45% வரை சலுகை கிடைக்கும். மற்ற பகுதிகளில் இது 35% வரை இருக்கும். அரசு முன்னுரிமை அளிக்கும் சில தொழில் துறைகளுக்கு இந்த சலுகை 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பெண் தொழில்முனைவோர், புதிய உற்பத்தி ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு கூடுதலாக 1% வட்டி சலுகை வழங்கப்படும். புதிய பணியாளர்களுக்காக நிறுவனம் செலுத்தும் இ.பி.எப்., தொகையிலும் ஐந்தாண்டுகள் வரை உதவி கிடைக்கும்.

காப்புரிமை பதிவு செலவில் 75% வரை, அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும். பொம்மை, காலணி, விளையாட்டு பொருட்கள், ரோபோ, ட்ரோன் போன்ற முன்னுரிமை துறைகளுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us