97 தேஜஸ் விமானங்கள் தயாரிக்க எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஆர்டர்
97 தேஜஸ் விமானங்கள் தயாரிக்க எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஆர்டர்
ADDED : ஆக 22, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:ராணுவ அமைச்சகத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக விமானங்களை தயாரித்து வினியோகிக்க, 62,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டரை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பெற்றுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட எச்.ஏ.எல்., நடப்பு நிதியாண்டில் 1.89 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர்களை பெற்றுள்ளது.
மேலும், தற்போதைய தேஜஸ் விமானங்களுக்கான ஆர்டருடன் சேர்த்து, மொத்த ஆர்டர்களின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்.