ADDED : டிச 13, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம், 12 'எஸ்.யூ.,-30 எம்.கே.ஐ.,' ரக போர் விமானங்களை வாங்க, பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்., எனும் 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, விமானத்துக்கு தேவையான துணை உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.
மத்திய அரசின் உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்த விமான தயாரிப்பில் 62.60 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களே பயன்படுத்தப்பட இருக்கின்றன.
ரஷ்யாவைச் சேர்ந்த எஸ்.யூ., - 30 எம்.கே.ஐ., ரக போர் விமானங்கள், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள எச்.ஏ.எல்., நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன.

