அதானி மீது ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டு: செபி தள்ளுபடி
அதானி மீது ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டு: செபி தள்ளுபடி
ADDED : செப் 19, 2025 01:35 AM

புதுடில்லி:ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, இதை தள்ளுபடி செய்வதாக செபி அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், கவுதம் அதானி மற்றும் அதானி குழும நிறுவனங்கள், பங்குச் சந்தை வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம் இது உண்மையல்ல என பல முறை தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரித்து வந்த செபி, குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், இதை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செபியின் முழு நேர உறுப்பினர் கமலேஷ் வர்ஷ்னி பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், “கவனமாக பரிசீலனை செய்ததில், அதானி குழுமம் மற்றும் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
''இதனால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த வழக்கு இதோடு முடித்து வைக்கப்படுகிறது,” என தெரிவித்து உள்ளார்.