ADDED : டிச 30, 2024 12:41 AM

புதுடில்லி:டிஜிட்டல் உள்கட்டமைப்பில் தொடர்ச்சியான முதலீடு, கொள்கை ஆதரவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த அக்டோபரில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொள்கை ஆதரவுடன் கூடிய தரவு மையங்கள், அதிவேக இணையம் உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பில் தொடர்ச்சியான முதலீடு காரணமாக இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதியை கடந்த அக்டோபரில், 2.92 லட்சம் கோடி ரூபாய் என்ற வரலாற்று மைல்கல்லுக்கு உயர்த்தியுள்ளது. இதை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 22.30 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் சேவைகள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த, 2005ல் 2.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2023ல் 21.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.