ADDED : பிப் 07, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஆவதை விரும்பாத நிஸான், கூட்டணி குறித்த பேச்சை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
டிரம்ப் அதிபரானதால், உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருவதோடு, மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் வரி யுத்தத்திலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது நிஸான் நிறுவனத்திற்கு மேலும் ஒரு தலைவலியை ஏற்படுத்தி உள்ள சூழலில் ஹோண்டாவுடன் முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

