ADDED : அக் 26, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இன்ஜினுக்கு பெட்ரோலை அனுப்பும் 'பியூயல் பம்ப்' கோளாறின் காரணமாக, 92,672 கார்களை திரும்பப் பெற உள்ளதாக 'ஹோண்டா கார்ஸ் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேஸ், ப்ரியோ, பி.ஆர்.வி., சிட்டி, ஜாஸ், டபிள்யு.ஆர்.வி., கார்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுஉள்ளன.
கடந்த ஆகஸ்ட் 2017 முதல் ஜூன் 2018 வரை தயாரிக்கப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன.
ஜூன் 2017 முதல் அக்டோபர் 2023 வரை ஏற்கனவே பியூயல் பம்ப் மாற்றம் செய்யப்பட்ட 2,204 கார்களும் இதில் அடங்கும்.