நாட்டின் மற்ற நகரங்களைவிட சென்னையில் வீடுகள் விலை குறைவு
நாட்டின் மற்ற நகரங்களைவிட சென்னையில் வீடுகள் விலை குறைவு
UPDATED : ஏப் 13, 2025 08:46 AM
ADDED : ஏப் 13, 2025 01:30 AM

புதுடில்லி:சென்னை, ஹைதராபாத், கொல்கட்டா உள்ளிட்ட நாட்டின் முக்கிய ஒன்பது நகரங்களில் கடந்த நிதியாண்டில், வீடுகளின் விலை சராசரியாக 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'பிராப் ஈக்விட்டி' தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டிலுள்ள முக்கியமான ஒன்பது நகரங்களில், சென்னையில் தான் வீடுகளின் விலை குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் முக்கிய விபரங்கள்:
* கடந்த நிதியாண்டில் அதிகபட்சமாக கொல்கட்டாவில் ஒரு சதுர அடி விலை 29 சதவீதம் அதிகரிப்பு
* மும்பை, நவி மும்பையில் 3 சதவீதம் குறைந்துள்ளது
* முக்கிய ஒன்பது நகரங்களில், வீடுகளின் விலை சராசரியாக 12 சதவீதமும்; மூன்று நிதியாண்டுகளில் 18 சதவீதமும் அதிகரித்து உள்ளது
* கடந்த ஜனவரி - மார்ச் காலத்தில் இந்த நகரங்களில் வீடு விற்பனை 23 சதவீதம் சரிந்து, 1.06 லட்சமாக குறைந்தது
* இதே காலத்தில் வீடுகளின் வினியோகம் 34 சதவீதம் சரிந்து 80,774 ஆக குறைந்தது.
சென்னை
* கடந்த நிதியாண்டில் சதுர அடி விலை 4 சதவீதம் அதிகரிப்பு
* சராசரியாக ஒரு சதுர அடி 7,989 ரூபாயாக உள்ளது
* ஒன்பது நகரங்களில் சென்னையில் தான் விலை குறைவு
* அதிகபட்சமாக மும்பையில் 34,026 ரூபாயாக உள்ளது.