சென்னை தவிர்த்து 6 நகரங்களில் வீடுகள் விற்பனை 20 சதவீதம் சரிவு
சென்னை தவிர்த்து 6 நகரங்களில் வீடுகள் விற்பனை 20 சதவீதம் சரிவு
UPDATED : ஜூன் 28, 2025 11:46 PM
ADDED : ஜூன் 28, 2025 11:41 PM

புதுடில்லி, ஜூன் 29-
நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 20 சதவீதம் குறைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.
நகரங்கள் வாரியாக பார்க்கும்போது, சென்னையில் மட்டுமே விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட மற்ற ஆறு நகரங்களில் வீடுகள் விற்பனை சரிந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வீடுகளின் விலை 11 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
இந்நிலையில், முந்தைய காலாண்டான ஜனவரி - மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிய வீடுகளின் வினியோகத்தை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் ஏப்ரல்- - ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 16 சதவீதம் குறைந்து உள்ளது.
கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் போர் சூழல் நிலவியதால், வீடு வாங்க விரும்பிய வாடிக்கையாளர்கள் பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடு விலை அதிகரித்து வரும் நிலையில், போர் பதற்றம் விற்பனையை மேலும் பாதித்துள்ளது.
எனினும், தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, வாடிக்கையாளர் களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வரும் மாதங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அனுஜ் பூரி
தலைவர், அனராக்
@block_G
subboxhd@அலுவலக குத்தகை இடம் அதிகரிப்புஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஏழு நகரங்களில் மொத்த அலுவலக குத்தகை இடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக கோலியர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் காலாண்டில் 161 லட்சம் சதுர அடியாக இருந்த மொத்த அலுவலக குத்தகை இடம், நடப்பாண்டில் 178 லட்சம் சதுர அடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வலுவான தேவையே இதற்கு முக்கிய காரணம்.