முக்கிய நகரங்களின் வீடு வினியோகம்; மார்ச் காலாண்டில் 34 சதவீதம் சரிவு
முக்கிய நகரங்களின் வீடு வினியோகம்; மார்ச் காலாண்டில் 34 சதவீதம் சரிவு
ADDED : ஏப் 01, 2025 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,; கடந்த ஜனவரி - மார்ச் மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில், புதிய வீடுகள் வினியோகத்தின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 81,000 ஆக உள்ளது என, 'பிராப்ஈக்விட்டிசினாப்சிஸ்' தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் 9 முக்கிய நகரங்களில், கடந்த ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில், புதிய வீடுகள் வினியோகத்தின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்து, 80,774 ஆக உள்ளது.
இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 1.22 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. பெங்களூரு மட்டுமே வினியோகத்தில் அதிகரிப்பை கண்டுள்ளது. மற்ற நகரங்கள் சரிவை சந்தித்துள்ளன. வாங்குவோரின் விருப்ப தேர்வுகள் குறைந்ததே இதற்கு காரணமாகும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

