ADDED : ஆக 03, 2025 07:58 PM

வ ங்கிக ளில் மறைந்திருக்கும் கோரப்படாத டிபாசிட் உள்ளிட்ட தொகையை கண்டறிந்து, அந் த பணத்தை பெற வழி செய்யும் ரிசர்வ் வங்கி இணையதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பல்வேறு காரணங்களினால் வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் டிபாசிட் உள்ளிட்ட தொகையை கொண்ட கணக்குகள் 10 ஆண்டுகளுக்கு பின் செயல்படாத கணக்காக அறிவிக்கப்பட்டு அந்த தொகை, முதலீட்டாளர் கல்வி, விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படு ம்.
இத்தகைய கோரப்படாத தொகையை கண்டறியும் தகவல்களை தொகுத்தளிக்கும் வசதியை ரிசர்வ் வங்கி இணைய தளம் மூலம் வழங்கி வருகிறது.
இந்த இணையதளத்தின் வாயிலாக 8 லட்சத்திற்கும் மேலானவர்கள் கோரப்படாத பழைய தொகையை கண்டறிந்து மீண்டும் பெற்றுள்ளனர் என, மக்கள வையில் தெரிவிக்கப்பட்ட தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
கோரப்படாத தொகை கொண்ட கணக்குகளை கண்டறிய, ரிசர்வ் வங்கி தளத்தின் உரிய பக்கத்தில், கணக்கு எண் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஏற்கப்படும் ஆவண தகவல்களை அளித்து தேடலாம்.
கோரப்படாத தொகை இருந்தால், தொடர்புடைய வங்கியை அணுகி அதைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி