sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மியூச்சுவல் பண்ட் முதலீட்டை சரியாக திட்டமிடுவது எப்படி?

/

மியூச்சுவல் பண்ட் முதலீட்டை சரியாக திட்டமிடுவது எப்படி?

மியூச்சுவல் பண்ட் முதலீட்டை சரியாக திட்டமிடுவது எப்படி?

மியூச்சுவல் பண்ட் முதலீட்டை சரியாக திட்டமிடுவது எப்படி?


ADDED : ஜூலை 20, 2025 08:49 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 08:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதலீடு விரிவாக்கம் என்பது ஏற்ற உத்தி என்றாலும், அதிக எண்ணிகையிலான நிதிகளில் முதலீடு செய்வது பாதகமாகலாம்.

மியூச்சுவல் பண்ட் தொடர்பான ஆர்வமும், முதலீடும் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு கணக்குகள் அதிகரித்திருப்பதோடு, இதில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பும் கணிசமாக அமைந்துள்ளது.

மேலும், எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு வழியில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. இந்த போக்கிற்கு ஏற்ப மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய நிதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன.

விரிவாக்கம்


மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல வகை இருப்பது போல, அவற்றில் முதலீடு செய்யவும் பல வகையான உத்திகள் முன்வைக்கப்படுகின்றன. பல்வேறு நிதிகளில் முதலீடு செய்து விரிவாக்கத்தை பின்பற்ற வேண்டும் எனும் கருத்தும் முக்கியமாக அமைகிறது.

ஒன்று அல்லது ஒரு சில நிதிகளில் மட்டுமே முதலீடு செய்யாமல், பல நிதிகளில் முதலீடு செய்வது விரிவாக்கத்தின் பலனை அளிக்கும் என்றாலும், ஒருவர் எத்தனை நிதிகளில் முதலீடு செய்யலாம் எனும் கேள்வியும் முக்கியமாகிறது. தேவைக்கு அதிகமான நிதிகளில் முதலீடு செய்யும் போது, முதலீடு தொகுப்பு சிக்கலாகி பராமரிப்பது கடினமாவதோடு பலனும் பாதிக்கப்படலாம்.

எனவே விரிவாக்கம் என்பது மிகை விரிவாக்கமாக மாறிவிடாமல் இருப்பது அவசியம் என வல்லுனர்கள் கருதுகின்றனர். ஒரே வகையான பிரிவில் பல நிதிகளை கொண்டிருப்பது, நிதி இலக்குகளுக்கு பொருந்தாத நிதிகளை கொண்டிருப்பது போன்ற பிரச்னைகள் இதனால் உண்டாகலாம்.

ஒரே பிரிவில் அதிக நிதிகள் இருப்பது விரிவாக்கத்தின் நோக்கத்திற்கு எதிராகவும் அமையலாம். குறிப்பிட்ட சில பிரிவில் மட்டும் அதிக முதலீடு இருப்பது பாதிப்பை உண்டாக்கலாம். மேலும் ஓரளவுக்கு மேல் நிதிகளை சேர்த்துக்கொண்டு போவது பாதகமாகவே அமையும்.

இடர் அம்சங்கள்


நிதிகளில் முதலீடு செய்வது மிகை விரிவாக்கமாக மாறாமல் இருக்க, தனித்தன்மை வாய்ந்த நிதிகளை மட்டுமே நாட வேண்டும். ஒரே மாதிரி இருக்கும் நிதிகள் என்றால் தவிர்த்து விடலாம். மேலும், இந்த நிதிகளும் முதலீட்டாளரின் நிதி இலக்குகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

தனித்தன்மையான நிதி என்பதால் தேவையில்லாத நிதியில் முதலீடு செய்யக்கூடாது. மற்றவர்கள் முதலீடு செய்கின்றனர் என்பதற்காகவும் நிதிகளை தேர்வு செய்யக்கூடாது. என்.எப்.ஓ., எனப்படும் புதிய வெளியீடுகளையும் தவிர்ப்பது நல்லது.

முதலீடு தொகுப்பில் சமபங்கு பிரிவில் சில நிதிகள் இருக்க வேண்டும். நிதி இலக்கு மற்றும் இடர் அம்சங்களுக்கு ஏற்ப சமபங்கு நிதிகளை தேர்வு செய்யலாம். ஐந்து முதல் ஏழு நிதிகள் போதுமானவை என்கின்றனர். மிட்கேப், லார்ஜ்கேப், ஸ்மால்கேப் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வு செய்யலாம். வரிச்சலுகைக்காக இ.எல்.எஸ்.எஸ்., நிதியை பரிசீலிக்கலாம்.

மற்றபடி, கடன்சார் நிதி பிரிவில், மூன்று அல்லது நான்கு நிதிகளை வைத்துக்கொள்ளலாம். நிதிகள் முதலீட்டிற்கான கால அளவும் முக்கியம். இவற்றுக்கு இடையிலான விகிதாசாரமும் முக்கியம். சமபங்கு, கடன்சார் நிதிகள், தங்கம் என தொகுப்பு அமைந்திருக்க வேண்டும்.

தங்க நிதிகள் மற்றும் இ.டி.எப்., வகை நிதிகளையும் தேவைக்கேற்ப பரிசீலிக்கலாம். இவற்றின் அடிப்படையில் பொருத்தமான முதலீடு தொகுப்பை உருவாக்கி கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us