புதுச்சேரியில் தாஜ் ஹோட்டல் அமைக்கிறது ஐ.எச்.சி.எல்.,
புதுச்சேரியில் தாஜ் ஹோட்டல் அமைக்கிறது ஐ.எச்.சி.எல்.,
ADDED : அக் 29, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐ.எச்.சி.எல்., எனப்படும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, புதுச்சேரியில் தாஜ் ஹோட்டல் பெயரில் நட்சத்திர ஹோட்டலை அமைக்க உள்ளது. இதை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கிறது.
மொத்தம், 52 ஏக்கரில் அமைக்கப்படும் ஹோட்டலில், 180 அறைகள், சிறப்பு உணவகங்கள், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.
இந்த ஹோட்டல், 10,700 சதுர அடியில் மிகப்பெரிய உட்புற விருந்து மண்டபம், வெளிப்புற நிகழ்வுகளுக்கான கடற்கரை புல்வெளி உள்ளிட்ட இடங்களை வழங்கும்.
'பொழுதுபோக்கிற்கான முக்கிய இடமாக புதுச்சேரி திகழ்கிறது. தாஜ் புதுச்சேரி ஹோட்டல், இப்பகுதியில் பெரிய அளவிலான சமூக நிகழ்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும்,' என ஐ.எச்.சி.எல்., தெரிவித்துள்ளது.

