ADDED : ஜூன் 18, 2025 12:46 AM

சென்னை:உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி தொழில் நுட்பங்கள் ஆகியவற்றுக்கு உதவும் வகையில், தமிழக வேளாண் துறையுடன், சென்னை ஐ.ஐ.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தில், வேளாண் வணிகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் அளிப்பது, வினியோக தொடர்களை மேம்படுத்துவது, உணவு வீணாவதைக் குறைத்து சந்தைப்படுத்துதல், மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை கற்பிக்கும் வகையில், வேளாண் துறை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவை, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் வாயிலாக, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான பேக்கேஜிங், பிராண்டிங், தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் அரசு திட்டங்களை மதிப்பீடு செய்வது உள்ளிட்டவை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.