ADDED : மார் 28, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, :மார்ச் 29, 30 மற்றும் 31 தேதிகளில் நாடு முழுதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்கள் இயங்கும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. வழக்கமாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்காது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கு வரும் 31ம் தேதியே கடைசி நாள்.
வரி செலுத்துவோர் பலரும் கடைசி நேரத்தில் வரி தாக்கல் செய்ய முயல்வர் என்பதால், அதற்கேற்ப மார்ச் 29, 30 வார இறுதி நாட்களிலும், 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை தினத்தன்றும் வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.