சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு / ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு
/
செய்திகள்
பொது
ஏற்றுமதி இறக்குமதி அதிகரிப்பு
ADDED : ஜன 01, 2024 11:50 PM
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஓராண்டுக்கு பின், ஆஸ்திரேலியாவுக்கான பொறியியல் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில், 7,835 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, 3 சதவீதம் அதிகமாகும்.இதே மதிப்பீட்டு காலத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கான இறக்குமதியும் குறிப்பிடத்தக்க வகையில், 30 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி 2,947 கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை முறையான அறிவிப்பு மற்றும் ஆலோசனையின்றி, வெவ்வேறு நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, 'டாடா கன்சல்டன்சி' நிறுவனம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து ஐ.டி., ஊழியர்களின் தொழிற்சங்கமான 'என்.ஐ.டி.இ.எஸ்.,'க்கு 180க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, இந்த கட்டாய பணியிட மாற்றங்களினால், ஏற்படும் சிரமங்கள் குறித்தும், டி.சி.எஸ்.,சின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வரும் 18ம் தேதி மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்திக்க வருமாறு டி.சி.எஸ். அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
என்.எல்.சி., நிறுவனம், ஒடிசாவில் உள்ள தலபிரா மின் உற்பத்தி நிலையத்தின், 19,400 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை, பாரத் மிகுமின் நிறுவனமான 'பெல்' நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் இந்த ஒப்பந்தம் வழங்கப்படும் என என்.எல்.சி., தெரிவித்துள்ளது. மூன்று '800 மெகாவாட்' மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிலக்கரியை, தலபிரா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து பெற்று, மின் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக என்.எல்.சி., தெரிவித்துள்ளது. எல் அண்டு டி., மற்றும் 'மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனங்களின் முயற்சியை முறியடித்து, இந்த ஒப்பந்தத்தை பெல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.