ADDED : நவ 04, 2024 10:30 PM

புதுடில்லி; இந்தியாவின் ஏற்றுமதி போட்டித் திறன், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல துறைகளில் அதிகரித்துள்ளதால், உலகளாவிய சந்தை பங்களிப்பில், இந்தியாவின் அளவு உயர்ந்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஏற்றுமதி போட்டித் திறன், கடந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில், குறிப்பாக பெட்ரோலியம், ரத்தினங்கள், வேளாண் ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை போன்றவற்றில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த 2018 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஏற்றுமதியின் பங்கு அதிகரித்துள்ள பிற துறைகளாக, மின்சார பொருட்கள், நியூமேடிக் டயர்கள், குழாய்கள், வால்வுகள் மற்றும் செமிகண்டக்டர் சாதனங்கள் உள்ளிட்டவை உள்ளன.
பெட்ரோலியம் ஏற்றுமதியில் 2018ல் உலகளாவிய பங்களிப்பில், 5வது இடத்தில் இருந்த இந்தியா, 2023ல் 7.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் இரண்டாவது பெரிய உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.
ரத்தின கற்கள் ஏற்றுமதி பங்களிப்பும், 2,158 கோடி ரூபாயில் இருந்து, 12,616 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதியில், 2018ல் உலகளாவிய பங்களிப்பில் 5வது இடத்தில் இருந்த இந்தியா, 2023ல் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது